articles

இந்திய அறிவியல் மாநாடுகளை தொடர்ந்து சிதைக்கும் விஷமத்தனம் - எஸ்.கிருஷ்ணா

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் அறிவியல் துறையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இந்திய அறிவியல் மாநாடுகளில் ஆர்.எஸ்.எஸ்சும் அதன் சங்பரிவார அமைப்பை சேர்ந்தவர்களும் பங்கேற்று விஷமத்தனமான பிற்போக்கு கருத்துக்களை பரப்பி தொடர்ந்து நாசப் படுத்தி வந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட விருதுகளை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டது; இதன் உச்சக் கட்டமாக 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த இந்திய அறிவியல் மாநாட்டிற்கு நிதி ஒதுக்கீட்டையே தற்போது ரத்து செய்துள்ளது.

அறிவியல் மீதுமும்முனைத் தாக்குதல்

நாடு விடுதலையடைந்த முதல் முப்பது ஆண்டுக ளில் ஒப்பீட்டளவில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், உலகமயமாக்கலுக்குப் பிறகு உலகளவில் வலதுசாரிகளின் எழுச்சி, இந்துத்துவ கும்பலின் வளர்ச்சி, நவதாராளவாத சமூக பொருளாதார திணிப்பு  ஆகிய மும்முனைத் தாக்குதல்களால் அறிவியல் மனப்பான்மை, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி,  இந்திய நாட்டின் சுயசார்பு வளர்ச்சி ஆகியவை பலவீனப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 10 ஆண்டு களாக இந்தியாவில் அதிகார அமைப்பில் ஆர்எஸ்எஸ் செலுத்தும் செல்வாக்கின் காரணமாகவும் மாநில அளவில் செயல்பட்ட அறிவியல் அகாடமிகள் மற்றும் உயர் கல்வித்துறையில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்கள் ஆகியவற்றை பறித்ததன் விளைவாகவும் பலவீனமடைந்துள்ளன.

இந்திய அறிவியல் மாநாடு துவக்கம்

‘இந்திய அறிவியல் மாநாடு’ எனும் சங்கம் 1914 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரிட்டிஷ் வேதியி யல் அறிஞர்களான ஜே.எஸ்.சைமன்சன், பேராசிரி யர்.பி.எஸ்.மக்னோஹன் ஆகியோரின் முயற்சியால் துவங்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் கல்கத்தா வில் உள்ள ஏசியாடிக் சொசைட்டி வளாகத்தில் அப்போ தைய கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த அசுதோஷ் முகர்ஜி தலைமையில் நடைபெற்றது.

உலகம் முழுவதுமிருந்து 105 விஞ்ஞா னிகள் கலந்துகொண்டனர். அறிவியல் ஆராய்ச்சிக ளை வளர்தெடுப்பது இம்மாநாடுகளின் முக்கிய நோக்கமாகும். அறிவியல் சார்ந்த பல்வேறு தலைப்பு களில் கருத்தரங்குகள், சிறப்பு அறிவியல் சொற்பொ ழிவுகள் மாநாட்டில் வழக்கமாக  நடைபெறும்.

1914 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய், எம்.விஸ்வேஸ்வரய்யா, ஜே.சி.போஸ், சர்.சி.வி.ராமன்,  எம்.என்.சாஹா, எஸ்.என். போஸ், எஸ்.எஸ்.பட்நாகர் உள்ளிட்ட பல முன்னணி விஞ்ஞானிகள் இந்திய அறிவியல் மாநாடுகளுக்கு தலைமை தாங்கினார்கள்.

1947 ஆம் ஆண்டு 34 ஆவது இந்திய அறிவியல் மாநாடு ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது. அறிவியல் மனப்பான்மையை மாண வர்கள், இளைஞர்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவரது உண்மையான ஆர்வம் அம்மாநாட்டின் சிறப்பம்சமாக வெளிப்பட்டது. 1976 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் மாநாட்டிற்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், மாநாட்டை ஏதேனும் ஒரு கருப்பொருள் அடிப்படையில் நடத்த வேண்டுமென்று ஆலோசனை வழங்கினார்.

அது ஒரு நடைமுறையாக தொடர்ந்து, அடுத்தடுத்த மாநாடுகள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளோடு நடைபெற்றன. அத்தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. இந்திய அறிவியல் மாநாடுகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகவும் அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்பவர்களாகவும் செயல்பட்டனர். மாநில பல்கலைக்கழகங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இந்திய அறிவியல் மாநாடு கள் பயன்பட்டன.  2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவா பிற்போக்குவாதிகள் அமைச்சர்களாகவும், அதிகாரி களாகவும் பொறுப்பேற்ற பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

பிற்போக்கு அடிப்படையிலான ஆய்வுக்  கட்டுரைகள், சொற்பொழிவுகள் நடத்த வற்புறுத்தப் பட்டது. இது நாடு முழுவதும் உலக அளவிலும் பல விஞ்ஞானிகளின் கண்டனத்திற்கும் உள்ளானது. தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “இந்திய அறிவியல் மாநாடுகள் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு உதவிகரமாக இருந்தது. புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் சொற்பொழிவுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இது நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந் தது” என கருத்து தெரிவித்திருந்தார். ஆராய்ச்சித் துறையில் ஓய்வு பெற்ற மற்றொரு விஞ்ஞானி கூறு கையில், இந்திய அறிவியல் மாநாடுகள் புவியியல், மானுடவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றின. ஆனால் தற்போது தவறான வழிகாட்டுதல்களால் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவ கலாச்சார ஆதிக்க நோக்கங்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கவலையுடன் குறிப்பிட்டார்.  

மாநாட்டில் விதைத்த  பிற்போக்கு கருத்துகள்

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்க், தனது நிறை ஆற்றல் சமன்பாடுகள் குறித்த ஆய்வு, வேதங்களிலிருந்து பெறப்பட்டது எனத் தெரிவித்த தாக கூறினார். 2015 ஆம் ஆண்டு ஆனந்த போடாஸ் என்பவர் பழைமையான இந்தியாவில் வானூர்திகள் பயன்படுத்தப்பட்டன என்றார். 2016 ஆம் ஆண்டு பாண்டே என்பவர், கடவுள் சிவன் மிகச்சிறந்த சுற்றுச்சூழலியலாளர் என்றார். இது போன்ற பிற்போக்குத்தனமான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமரின் அறிவியல் ஆலோசகர், இந்திய அறிவியல் அகாடமிகள், இந்திய அறிவியல் மாநாட்டு தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் இணைந்து முயற்சி எடுக்க வேண்டுமென அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்திய அறிவியல் மாநாடு ஒத்திவைப்பு 
100 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வந்த மாநாடுகள் 2015 ஆம் ஆண்டு முதல் முக்கியத்து வத்தை இழந்து தற்போது நடத்த முடியாத சூழலும் உருவாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு 2022ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகள் மட்டும் கொரோனா தொற்று காரணமாக இந்திய அறிவியல் மாநாடு நடத்த முடியவில்லை என்ற காரணத்தை கூறினர். 2023 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். 2024 ஆம் ஆண்டு 109 ஆவது மாநாடு ஜனவரி-3 லக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெறப் போவ தாக அறிவிக்கப்பட்டது. பிறகு ஜலந்தரில் உள்ள லவ்லி பல்கலைக்கழகத்தில் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. மாநாடு நடத்த முடியாமல் போவதற்கு ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பது தான் முக்கிய காரணம். 

சங்பரிவார அமைப்பின்   சர்வதேச அறிவியல் திருவிழா
ஒருபக்கம் இந்திய அறிவியல் மாநாட்டை சீர்குலைக்கும் பணிகளைச் செய்து கொண்டே, இன்னொரு பக்கம் அதற்கு இணையான இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா என்பதை 2015 ஆம் ஆண்டு துவக்கியது ஒன்றிய அரசு. சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான விஞ்ஞான பாரதி (VIBHA) என்ற அமைப்பு ஆண்டு தோறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை (IISF-INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL) நடத்துகி றது. இத்திருவிழாவுக்கான அலுவலகம் குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடை பெறும் நிகழ்வின் பிரசுரங்களில் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறும். இந்திய அறிவியல் மாநாடுக ளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கி வந்த 5 கோடி ரூபாய் நிதியை ரத்து செய்த அதே சூழலில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடத்துவதற்கு 25 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசாங்கம். விஞ்ஞான பாரதி (VIBHA) என்ற அமைப்பின் நோக்க மானது அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்து வதல்ல; அதற்கு நேர்மாறாக, இந்தியாவின் பழம் பெருமைகள் என்ற பெயரில் இந்துத்துவா அடிப்படை யிலான - பிற்போக்கு மத அடிப்படையிலான வலதுசாரி சித்தாந்தத்தை ஊக்குவிப்பதே ஆகும். இதற்கு மோடி அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்திய அறிவியல் மாநாட்டிற்கு மாற்றாக இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா இருக்க வேண்டுமென்று முயற்சிக்கிறது.

இந்திய அறிவியல் மாநாடு இன்னும் அதிகாரப்பூர்வ மாக ரத்து செய்யப்படாத சூழலில் வேறு ஏதேனும் நிதியினை திரட்டி 2024 ஆம் ஆண்டு மாநாட்டை நடத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்பு கிறார்கள். ஆனால் அரசாங்க முத்திரையும் ஒத்து ழைப்பும் கிடைக்காத நிலையில் இது எவ்வளவு தூரம் சாத்தியம் எனத் தெரியவில்லை. 

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜனவரி 16 
தமிழில்: சௌ.மோசஸ் பிரபு

;